நம்மில் பலபேருடைய வாழ்வின் முக்கியமான் லட்சியங்களில் ஒன்று சொந்த வீடு கட்டுவது. அப்படி சொந்த வீடு கட்டுவதற்கு முன் வீடு கட்டுவதற்கான மனை வாங்குவது.
அப்படி நாம் வாங்க நினைக்கும் மனையை சற்று சிந்தித்து வாங்குவது சிறந்தது. அதற்காக நாம் என்ன மாதிரியான தகவல்களை ஆராய வேண்டும் என்று இந்த பதிவில் நாம் சிறிது பகிர்ந்துகொள்ளலாம்.
1.மனை அமைந்துள்ள இடம் :
நாம் இன்றைய சூழ்நிலையில் பல்வேறு இடங்களில் பல்லாயிரக்கணக்கான மனைகள் ஏற்படுத்தப்பட்டு வெறுமனே மட்டுமல்லாமல் புதர் மண்டி கிடக்கின்றன . அப்படி உள்ள இடங்களை நாம் சற்று சிந்தித்து வாங்க வேண்டும்.
மனை அமைந்துள்ள இடம் சிறிது ஆண்டில் முன்னேற்றம் அடையக்கூடிய இடமாக தேர்ந்தெடுப்பது முக்கியம். கையில் பணம் இருக்கின்றேது என்பதற்காகவும் மற்றும் வீட்டு மனை கண்டிப்பாக வாங்க வேண்டும் என்பதற்காகவும் வாங்குதல் கூடாது.
2.இயற்க்கை காரணிகள் பாதிப்பு :
ஏரி, ஆறு மற்றும் கால்வாய் அருகில் உள்ள இடங்களை தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. அதை ஒட்டி இருக்கும் மனைகள் ஏரி அல்லது கால்வாயை ஆக்கிரமித்துள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும் .
3.மனை அங்கீகாரம் :
போடப்பட்ட மனைகள் தகுந்த அதிகாரிகளிடம் அங்கீகாரம் வாங்கப்பட்டுள்ளதா என்று உறுதிபடுத்திகொள்ள வேண்டும்.
4. மற்ற காரணங்கள் :
போக்குவரத்து, பள்ளி ,மருத்துவமனை போன்ற மற்ற தேவைகளுக்கு அது எளிதாகவும் பாதுகாப்பான இடமாகவும் உள்ளதா எனவும் கவனம்கொள்ள வேண்டும்.

0 Comments